Jan 20, 2019 04:53 AM

நடிகருடன் படுக்கை அறையில் ரைசா! - போட்டாவால் பரபரப்பு

நடிகருடன் படுக்கை அறையில் ரைசா! - போட்டாவால் பரபரப்பு

பிக் பாஸ் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா, தற்போது தமிழ் சினிமாவின் ஹீரோயினாக உருவெடுத்திருக்கிறார். அவரது முதல் படமான ‘பியார் பிரேமா காதல்’ படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வருகின்றது.

 

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ‘ஆலிஸ்’ என்ற படத்தில் நடிக்கும் ரைசா, அப்படியே ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

 

இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷுடன் ரைசா படுக்கை அறையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்துடன் “சேப்டி ஃபஸ்ட்” (Safety First) என்ற ரைசாவின் ட்வீட்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இது, ஜி.வி மற்றும் ரைசா நடிக்கும் படத்திற்கான விளம்பர யுக்தி தான் என்றாலும், ரைசாவின் சேப்டி ஃபஸ்ட் பதிலால், சர்ச்சையாகியுள்ளது.