Jan 08, 2019 09:38 AM

ரஜினி மகளுக்கு இரண்டாவது திருமணம்! - திருப்பதியில் அழைப்பிதழுக்கு பூஜை

ரஜினி மகளுக்கு இரண்டாவது திருமணம்! - திருப்பதியில் அழைப்பிதழுக்கு பூஜை

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா, சென்னையை சேர்ந்த தொழிலதிரை காதலித்து திருமணம்  செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.

 

இதற்கிடையே, செளந்தர்யா நீதிமன்றம் மூலம் முறைப்படி விவாகரத்து பெற்று கணவரை பிரிந்த நிலையில், திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.

 

இந்த நிலையில், கோவையை சேர்ந்த தொழிலதிபரின் மகனுடன் பழகிய செளந்தர்யா, அவருடன் காதல் வயப்பட்டார். தற்போது இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்து, கடந்த மாதம் எளிமையான முறையில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்தனர். இவர்களுடைய திருமணம்  அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

 

தற்போது, செளந்தர்யாவின் இரண்டாவது திருமணத்திற்கான அழைப்பிதழ் தயாராகியுள்ளது. திருமண அழைப்பிதழை திருப்பதி ஏழுமலையான் கோவில் வைத்து செளர்ந்தர்யா நேற்று முன் தினம் பூஜை செய்தார். அவருடன் லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட அவரது நெருங்கிய உறவினர்கள் சுமார் 20 பேர் சென்றார்கள்.