செளந்தர்யாவின் கணவருக்காக சிபாரிசு செய்த ரஜினி! - எதற்கு தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், அவர் தற்போது விசாகன் வணங்காமுடி என்ற தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.
தொழிலதிபராக இருந்தாலும் விசாகனுக்கு நடிப்பின் மீதும் ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில், குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்த ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விசாகன் நடித்தார்.
இதற்கிடையே, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விசாகன் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் உண்மை தான் என்று நம்பந்தகுந்த வட்டாரங்கள் கூறி வரும் நிலையில், இந்த வாய்ப்பை விசாகனுக்கு பெற்று தந்ததே ரஜினிகாந்த் தானாம். தனது மாப்பிள்ளைக்கு நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தை பார்த்து அவரை ஹீரோவாக்க முடிவு செய்த ரஜினி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் சிபாரி செய்தாராம்.
ரஜினிகாந்தின் சிபாரிசினால் தான் விசாகனை ஹீரோவாக வைத்து கார்த்திக் சுப்புராஜ் படம் இயக்க சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.