Dec 08, 2019 09:46 AM

ரஜினிக்கும், எம்.ஜி.ஆர்க்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது - ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிக்கும், எம்.ஜி.ஆர்க்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது - ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “நான் ரஜினி சாரின் சீனியர் ரசிகன். எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால், அவருக்கும் ரஜினி சாருக்கும் இடையே எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் வித்தியாசமானவர்.

 

தமிழ், இந்தி என அனைத்து நடிகர்களிடமும் ரஜினிகாந்தின் சாயல் இருக்கும். தலைவர் ரசிகர்கல் என் ரசிகர்கள் கிடையாது. ஏனென்றால் நானே அவரது ரசிகன் தான்.

 

நிலவை காட்டி சாப்பாடு ஊட்டுவார்கள். நான் ரஜினி சாரை இயக்கிய நிலவில் இறங்கியது போன்ற அனுபவத்தை கொடுத்தது.” என்றார்.