Aug 13, 2025 11:05 AM

’குசேலன்’ படத்திற்கு காட்டிய பொறுப்புணர்வை ‘கூலி’ படத்திற்கு காட்டாத ரஜினிகாந்த்!

’குசேலன்’ படத்திற்கு காட்டிய பொறுப்புணர்வை ‘கூலி’ படத்திற்கு காட்டாத ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. ரஜினிகாந்த் இதை முன்பே கணித்து தான், படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில், ”‘குசேலன்’ ரஜினிகாந்த் படம் அல்ல, பசுபதியின் படம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு படம் பார்க்க வாருங்கள்” என்று கூறினார். காரணம், ரஜினிகாந்த் படம் என்று நம்பி வரும் ரசிகர்கள், அவருக்கான காட்சிகள் குறைவாக இருப்பதை பார்த்து ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது, என்ற பொறுப்புணர்வு தான்.

 

ரஜினிகாந்த் சொன்னதால் என்னவோ, ‘குசேலன்’ படம் வெளியாகி மிகப்பெரிய அடி வாங்கியது. திரையரங்க உரிமையாளர்கல் ரஜினிகாந்த் வீட்டு முன்பு போராட்டம் நடத்தி இழப்பீடு பெறும் சம்பவங்களும் நடைபெற்றது. இது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த படத்திற்காக ரஜினிகாந்த் காட்டிய பொறுப்புணர்வை தற்போது ‘கூலி’ படத்திற்கு காட்டவில்லை என்பது தான் பெரும் சோகம்.

 

அதீத வன்முறைகளோடு உருவாகியிருக்கும் ‘கூலி’ படத்திற்கு தணிக்கை குழுவினர் ’ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதாவது 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே ‘கூலி’ படத்தை பார்க்க வேண்டும். படத்தின் போஸ்டர்களில் சிறிய அளவில் ஏ சான்றிதழ் போடப்பட்டிருந்தாலும், ரசிகர்கள் ஒட்டும் போஸ்டர் உள்ளிட்ட பல போஸ்டர்களில் கூலி தலைப்புக்கு கீழே ஏ சான்றிதல் குறிப்பிடாமல் உள்ளது. அதேபோல், திரையரங்குகளில் வைக்கப்படும் பெரிய பெரிய பேனர்களிலும் ஏ சான்றிதழுக்கான அடையாளும் கண்ணுக்கு தெரியாத வகையில் இடம்பெற்றுள்ளது.

 

ரஜினிகாந்த் படம் என்பதாலும், தொடர் விடுமுறை என்பதாலும், சிறுவர்களும் கூலி படத்தை பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், வன்முறை நிறைந்த ’ஏ’ சான்றிதழ் பெற்ற படம் என்பதால் சிறுவர்களை அழைத்து வர வேண்டாம், என்பதை விளக்க வேண்டிய கட்டாயம் படக்குழுவுக்கு உள்ளது. குறிப்பாக ரஜினிகாந்துக்கு உள்ளது. தனது படமாக இருந்தாலும், வமுறை காட்சிகள் நிறைந்திருப்பதால், ஏ சான்றிதழ் பெற்றிருப்பதால், ‘கூலி’ படத்தை பார்க்க சிறுவர்களை அழைத்து வர வேண்டாம், என்ற தகவலை ரஜினிகாந்த் தன் மூலம் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அவர் அப்படி செய்யவில்லை.

 

இந்த நிலையில், கூலி திரைப்படத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் ஏ சான்றிதழை மறைக்கும் வகையில் திரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுகிறதா ?, சிறுவர்கள் அந்த படத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மூத்த நிருபர் ஒற்றன் துரை, காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரை தொடர்ந்தாவது கூலி படக்குழுவினரோ அல்லது ரஜினிகாந்த் தரப்பினரோ ‘கூலி’ சிறுவர்களுக்கான படம் இல்லை, என்பதை பொறுப்புணர்வோடு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.