ரூ.50 ஆயிரத்திற்கான பரிசுப் போட்டி அறிவித்த ‘ரெட் ஃபிளவர்’ நாயகன் விக்னேஷ்!

அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில், விக்னேஷ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘ரெட் ஃபிளவர்’ திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. வித்தியாசமான முயற்சியாக உருவாகியுள்ள இப்படம் கலவையான விமசனங்களை பெற்றுள்ள நிலையில், படத்தின் நாயகன் விக்னேஷ், படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக ரூ.50 ஆயிரத்திற்கான பரிசுப் போட்டியை அறிவித்துள்ளார்.
அதன்படி, ’ரெட் ஃபிளவர்’ படத்தில், இந்திய பெண்கள் மால்கம் டைனஸ்டி கமாண்டோஸ் என்பவர்களால் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். அந்த கமாண்டோஸில் எத்தனை பேரை ஏஜென்ட் விக்கி (ஹீரோ) கொன்றார்?, என்ற கேள்விக்குய் சரியான பதில் கூறி, ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு வெல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக விக்னேஷ், கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளனர். மேலும் நாசர், ஒய்ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய், யோகி, அஜய் ரத்தினம், லீலா, சாம்சங் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை – சந்தோஷம், ஒளிப்பதிவு – தேவ சூர்யா, எடிட்டிங் – அரவிந்த், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆண்ட்ரு பாண்டியன்.