Aug 23, 2018 08:56 AM
அரவிந்த்சாமிக்கு ஜோடியான ரெஜினா!

’என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராஜபாண்டி, அரவிந்த்சாமியை வைத்து தனது மூன்றாவது படத்தை இயக்கும் செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். இதற்கிடையே, இப்படத்தில் ஹீரோயினாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
வித்தியாசமான இப்படத்தின் கதையை கேட்டவுடன் அரவிந்த்சாமி ஓகே சொல்லியிருக்கிறார். அதைப்போல ரெஜினாவும் இப்படத்தின் கதையை கேட்டதும் எந்தவித தயக்கமும் இன்றி உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
வரும் செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதற்காக சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.