Nov 30, 2018 05:21 AM

ரியாமிகா தற்கொலையில் புது திருப்பம்! - காதலனிடம் இருந்து கிடைத்த பகீர் தகவல்

ரியாமிகா தற்கொலையில் புது திருப்பம்! - காதலனிடம் இருந்து கிடைத்த பகீர் தகவல்

சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த திரைப்பட நடிகை ரியாமிகா, 28 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரை சேர்ந்த ரியாமிகா, ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’, ‘எக்ஸ் வீடியோஸ்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

 

இதற்கிடையே, போதிய சினிமா வாய்ப்புகள் இல்லாததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், போலீசாரின் விசாரணையின் மூலம் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

 

ரியாமிகாவின் தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிசோதித்து வரும் நிலையில், அவரது காதலர் என்று கூறிக்கொள்ளும் தினேஷ் என்பவர்,  ரியாமிகா தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் தொடர்பு கொண்டதாகவும், அவர் அப்போது வீட்டில் இல்லை, என்று தன்னிடம் தெரிவித்ததாகவும், போலீசாரிடம் கூறியுள்ளார். 

மேலும், ரியாமிகா அன்று இரவு முழுவதும் வெளியில் தங்கியிருந்ததாக கூறிய தினேஷ், அவர் எங்கு தங்கியிருந்தார், என்பது தனக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.

 

ஒரு நாள் முழுவதும் வெளியில் தங்கியிருந்த ரியாமிகா, அதன் மறுநாள் தற்கொலை செய்துகொண்டதால், அவர் முந்தை நாள் எங்கு தங்கியிருந்தார், என்பதை அறிந்தால் அவரது தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும். ஆனால், அவர் எங்கு தங்கினார் என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது.