May 01, 2022 12:15 PM

ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவான ‘தோட்டா’ ஆல்பம் பாடல் ரிலீஸ்

ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவான ‘தோட்டா’ ஆல்பம் பாடல் ரிலீஸ்

சுயாதீன இசைக்களைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக சுயாதீன இசை வீடியோ ஆல்பங்களை தயாரித்து வரும் நாய்ஸ் & க்ரைன்ஸ் (Noise & Grains) நிறுவனம் தயாரித்த “கண்ணம்மா என்னம்மா...” பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அந்நிறுவனம் “தோட்டா...” என்று தொடங்கும் சுயாதீன இசை வீடியோ பாடலை தயாரித்துள்ளது. ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் ஆகியோர் நடனம் ஆடியுள்ள இந்த பாடலை பிரேம்ஜி மற்றும் நித்யஸ்ரீ பாடியுள்ளனர். தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த பாடலை பிரிட்டோ ஜே.பி இயக்கியுள்ளார்.

 

இந்த பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில், பிக்பாஸ் புகழ் ராஜு, அபிராமி, ஜூலி, சக்ரவர்த்தி, கேப்ரியல்லா உள்ளிட்ட சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் நாய்ஸ் & க்ரைன்ஸ் சார்பில் பேசிய கார்த்திக், “கண்ணம்மா பாடல் மிகப்பெரிய வெற்றி தந்தது. அதை தொடர்ந்து இந்த பாடல் குறித்து ரியோ சொன்ன போது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இந்த பாடலை உங்களுக்கு வழங்குவது இன்னும் மகிழ்ச்சி. பாடலுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

நாய்ஸ் & க்ரைன்ஸ் மகாவீர் பேசுகையில், “நாய்ஸ் & க்ரைன்ஸ் நிறுவனத்தில் அனைத்தையுமே திட்டமிட்டு தான், பெரிய அளவில் செய்து வருகிறோம். சுயாதீன கலைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை  அனைவரும் கொண்டாடும் வகையில் தர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறோம், நன்றி.” என்றார்.

 

நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், “கண்ணம்மா பாடல்  ஒரு மொட்டை மாடியில் எதேச்சையாக உருவானது. அது மிகப்பெரிய ஹிட்டானது. இந்த பாடல் பற்றி Noise & Grains அவர்களிடம் தெரிவித்தவுடன் ஓகே சொல்லிவிட்டார்கள். அவர்களுக்கு தான் பெரிய நன்றி சொல்ல வேண்டும். மாதேஷ் மாணிக்கம் பெரிய பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்பவர் எங்கள் டீமில் அவர் மட்டும் தான் பெரிய ஆள், அவர் இந்த பாடலை செய்து தந்ததற்கு நன்றி. பிரிட்டோ மிக அற்புதமாக இயக்கியுள்ளார். அவர் இன்னும் பெரிதாக வளர்வார். பிக்பாஸில் சண்டை போட்டுக்கொண்டாலும் நானும் ரம்யாவும் நண்பர்கள் அவர் இதில் நடித்தது மகிழச்சி. எங்களை பாராட்ட வந்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

Thotta

 

நடிகை ரம்யா பாண்டியன் பேசுகையில், “நான் இதுவரை எந்த ஆல்பம் பாடலும் செய்ததில்லை. பிரிட்டோ சொன்ன ஐடியா பிடித்திருந்தது. உடனே ஒப்புக்கொண்டேன் இந்த டீம் ஜாலியான டீம். இப்பாடலில் வேலை பார்த்த அனுபவம் மிக சந்தோசமாக இருந்தது. இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ரீல்-ஸில் எங்கள் நடனத்தை ஆடி இப்பாடலை ஹிட் செய்யுங்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் பிரிட்டோ பேசுகையில், “கண்ணம்மா பாடல் ஹிட்டான பிறகு இந்த பாடல் செய்யலாம் என முடிவெடுத்த போது முதலில் ரியோ தான் செய்ய வேண்டும் என நினைத்தேன். அவரிடம் ரம்யா இந்த பாடலை செய்தால் நன்றாக இருக்குமென்று சொன்னேன். அவர் ஒப்புக்கொள்வார் என்றால் ஓகே என்றார். ரம்யா ஒப்புக்கொண்டு பணியாற்றி தந்ததற்கு நன்றி. என்னை நம்பி கடுமையாக உழைத்த என் குழுவினருக்கு நன்றி. இந்த பாடலை அட்டகாசமாக பாடி தந்த பிரேம் ஜி மற்றும் நித்யஶ்ரீ இருவரும்கும் நன்றி. இந்த பாடலையும் பெரிய அளவில் வெளியிடும் Noise & Grains அவர்களுக்கு நன்றி.” என்றார்.

 

நடிகர் பிக்பாஸ் பிரபலம் ராஜு பேசுகையில், “நானும் ரியோவும் வாய்ப்பு தேடிய காலத்திலிருந்தே மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர் எப்போதும் சின்ஸியராக இருப்பார். அவர் ரொம்பவும் திறமைசாலி. இந்த பாடலில் நடனம் அற்புதமாக இருந்தது. ரம்யாவின் ரசிகன் நான், அவருக்காகவே பலமுறை பாடல் பார்த்தேன். திரைப்பட பாடல் வெளியீட்டு விழா தான் இவ்வளவு பெரிதாக நடக்கும் இந்த பாடலுக்கு நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ரியோவுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

 

ஏ.தாவூத் எழுதியுள்ள இந்த பாடலுக்கு அபு மற்றும் சால்ஸ் நடனம் அமைத்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, கிருஷ்ணா குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். கிரியேட்டிவ் டைரக்டராக கார்த்திக் ச்ருனிவாஷ் பணியாற்றியுள்ளார்.