Nov 26, 2018 12:45 PM

விஜய், அஜித்தை நிராகரித்த ஆர்.ஜே.பாலாஜி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

விஜய், அஜித்தை நிராகரித்த ஆர்.ஜே.பாலாஜி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

ரஜினி மற்றும் கமல் என இருந்த தமிழ் சினிமா தற்போது விஜய் மற்றும் அஜித் என்று மாறிவிட்டது. ரஜினியும், கமலும் தற்போது நடித்துக் கொண்டிருந்தாலும், விஜய் மற்றும் அஜித் இருவருக்குமான ரசிகரகள் அதிகரித்திருப்பதோடு, அவர்களின் படங்களுக்குமான வியாபாரமும் அதிகரித்திருக்கிறது.

 

விஜய், அஜித் ஆகியோரது கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டிருப்பது போல, பல இயக்குநர்கள் இவர்களை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்காதா, என்ற எதிர்ப்பார்ப்பிலும் இருக்கிறார்கள். இதேபோல தான் நடிகர், நடிகைகளும், விஜய், அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார்கள். இப்படி இவர்களுடன் நடிக்க, இவர்களை வைத்து படம் இயக்க, தயாரிக்க பலர் காத்துக்கொண்டிருப்பது போல பல விருது கமிட்டிகளும் இவர்களுக்கு விருதுகள் வழங்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், பல சாதனைகளை செய்துவிட்டு சத்தமில்லாமல் சாதாரணமாக சென்னையில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சாதனையாளர்களை தேடிப் பிடித்து ‘ஹீரோஸ் ஆப் சென்னை’ என்ற விருதை தனியார் நிறுவனம் ஒன்று வழங்கியுள்ளது. இவ்விருது வழங்கும் விழா சென்னை ஃபெதர்ஸ் ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. 

 

விருது வழங்குவதற்கு முன்பாக நடுவர் குழு ஒன்று அமைக்கப்பட்டு விருதுக்குரிய தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது விருதுக்குரியவர்களாக பொதுமக்களால் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பிரிவுகளின் கீழ், ஒவ்வொரு பிரிவிலும் 15 பேர்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி வெற்றியாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு மக்களிடம் வழங்க அவர்கள் வாக்குகள் மூலம் இறுதி வெற்றியாளரை தேர்வு செய்தனர்.

 

முன்பாக, பொதுமக்களால் பரிந்துரைக்கப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில், பெரும்பாலானவர்கள் விஜய் மற்றும் அஜித் பெயரை ‘ஹீரோஸ் ஆப் சென்னை 2018’ விருதுக்கு தேர்வு செய்திருந்தார்களாம். விருது யாருக்கு வழங்கப்படும், என்பது குறித்து தெளிவாக, விருதுக்குரிய இணையத்திள் குறிப்பிடப்பட்டிருந்தும், ரசிகர்கள் அஜித் மற்றும் விஜய் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டிருந்தது ஏமாற்றமாக இருந்தாலும், அவர்களது பெயர்களை நிராகரித்ததால், விருதுக்குரியவர்களின் பட்டியலின் எண்ணிக்கை கனிசமாக குறைந்து, நடுவர் குழுவுக்கு வேலை பளுவும் குறைந்தது, என்று விருது தேர்வுக் குழுவின் உறுப்பினரான ஆர்.ஜே.பாலாஜி கூறினார்.

 

RJ Balaji

 

ஆர்.ஜே.பாலாஜி தனது வேலையை சரியாக செய்திருந்தாலும், விஜய் மற்றும் அஜித்தை நிராகரித்தது குறித்து அவர் கூறியவுடன், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.