Apr 22, 2022 07:22 PM

மே 6 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகும் ‘சாணிக்காயிதம்’

மே 6 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகும் ‘சாணிக்காயிதம்’

இயக்குநர் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருக்கும் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான ‘சாணிக்காயிதம்’ நேரடியாக அமேசான் ஒடிடி தளத்தில் வரும் மே 6 ஆம் தேதி வெளியாகிறது.

 

ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில்  கீர்த்தி சுரேஷ், மற்றும் செல்வராகவன் ஆகியோர் முதன்மை  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். பொன்னி  (கீர்த்தி சுரேஷ் தோன்றும் பாத்திரம்) மற்றும் அவளது குடும்பத்தினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது,  தலைமுறை தலைமுறையாக அக்குடும்பத்திற்கு நீடித்து வந்த சாபம் உண்மையாக மாறத்தொடங்கும் போது,  விளம்பர முன்னோட்ட காட்சிகளில் காணப்படுவது போல அவர் ஒரு கசப்பான கடந்த காலத்தை தன்னோடு பகிர்ந்து கொண்ட சங்கையாவோடு (செல்வராகவன் தோன்றும் பாத்திரம்)  இணைந்து எதிரிகளைப் பழிக்குப் பழி வாங்க ஆரம்பிக்கிறார். இதனை சுற்றியே இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் திரைப்படம் பிரத்யேகமாக  மே 6 ஆம் தேதி பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது,  மற்றும் இந்தத் திரைப்படம் தெலுங்கில் ’சின்னி’ (Chinni) என்ற பெயரிலும் மலையாளத்தில் ’சாணிக்காயிதம்’ என்ற பெயரிலும்  ஒளிபரப்பாகிறது.

 

அமேசான் பிரைம் வீடியோ இந்தியா கான்டெண்ட் லைசென்ஸிங் தலைவர் மணீஷ் மெங்கானி கூறுகையில், “ப்ரைம் வீடியோவில் நாங்கள் எப்போதுமே மொழி மற்றும் புவியியல் எல்லைகளைத் தாண்டி  அனைவரையும் சென்றடையும் வகையிலான கதைகளை தேடிவருகிறோம். அதிகளவில் மிகவும் ஆவலோடு  எதிர்பார்க்கப்பட்டும் ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்தின் உலகளவிலான சிறப்புக் காட்சி வெளியீட்டுக்காக பிரைம் வீடியோ சித்தார்த் ரவிபதி மற்றும் அருண் மாதேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

 

படம் குறித்து  இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறுகையில், “சாணிக்காயிதம் மனதை உலுக்கும் ஒரு அழுத்தமான படைப்பு; மனதைக்கொள்ளை கொள்ளும்  வகையிலான கதை சொல்லும் பாங்கு மற்றும் அற்புதமான நடிப்பு ஆகியவற்றை கொண்டுள்ள இந்தத் திரைப்படம் அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களை இறுதிவரை கட்டிப்போடும். வழக்கமான கதைகளை வழக்கத்திற்கு மாறாக ரத்தமும் சதையுமாக மயிர்க்கூச்செறியும் வகையில்  மாறுபட்ட வடிவங்களில் சொல்வதில் நான் மிகவும் உற்சாகம் அடைகிறேன். பழிக்குப் பழி வாங்கத்துடிக்கும் கருப்பொருளோடு பின்னிப்பிணைந்த ஒரு பரபரப்பான அதிரடியான கதைக்களம் இப்படத்தில்  அமைந்துள்ளது. பழிவாங்கும்  குறிக்கோளோடு  பயணப்படும் ஒரு பெண்ணின் கதை இது. ஒவ்வொரு வகையான  கதைக்கும் ஒவ்வொரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, அமேசான் ப்ரைம் வீடியோவின் பெரும் விநியோகத்தின் துணையோடு இணைந்து உலகெங்கிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு  சாணிக்காயிதத்தை கொண்டு செல்வதில் நான் பரவசமடைந்திருக்கிறேன்.” என்றார்.

 

திரைப்படத்தின் கிரியேட்டிவ் ப்ரொட்யூசர் சித்தார்த் ரவிபதி கூறுகையில், ““சாணிக்காயிதம் இதயத்தைக் கொள்ளைகொள்ளும் அதே அளவில் இதயத்தை கசக்கிப் பிழியும் ஒரு கதை. நீதியைத் தேடி அலையும் ஒரு பெண்ணின் வாழ்வை  கண்முன் கொண்டுவருவதில் அருண் மாதேஸ்வரன் அற்புதமாக செயல்பட்டிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் இந்தக் கதைக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் எல்லைகளைக் கடந்த மிகச்சிறப்பான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்” அனைத்து மொழிகளிலும் மே 6 ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்தத்திரைப்படத்தைக் காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்” என்றார்.