இயக்குநர் விஜயுடன் இணையும் சாய் பல்லவி! - கிளம்ப போகும் புது சர்ச்சை

‘பிரேமம்’ படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான சார் பல்லவி, தெலுங்கு சினிமாவில் வெற்றி ஹீரோயினாக வலம் வரும் நிலையில், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவான ‘கரு’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும், சாய் பல்லவிக்கு கோலிவுட்டில் பல வாய்ப்புகள் வந்தவண்ணம் தான் உள்ளது.
இதற்கிடையே, சாய் பல்லவி குறித்து பல கிசுகிசுக்கள் வெளியான நிலையில், தற்போது மீண்டும் இயக்குநர் விஜயுடன் இணைகிறார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாக்கும் பல இயக்குநர்களில் விஜயும் ஒருவர். இவர் இயக்க இருக்கும் ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன் நடிக்க, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் வேடத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா குறித்து பல சர்ச்சையான தகவல்கள் உலா வரும் நிலையில், சாய் பல்லவி அவரது வேடத்தில் நடிப்பதாலும், இப்படத்தாலும் புதிய சர்ச்சைகள் உருவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.