Aug 28, 2018 06:34 AM

கரார் காட்டிய சமந்தா! - கணவருக்கு ஏற்பட்ட சிக்கல்

கரார் காட்டிய சமந்தா! - கணவருக்கு ஏற்பட்ட சிக்கல்

தெலுங்கு நடிகை நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சமந்தா, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு அவரது நடிப்பில் வெளியான அனைத்துப் படங்களும் ஹிட் ஆனதால் அவருக்கு பல வாய்ப்புகள் வருவதால், திருமண வாழ்க்கையில் கூட கவனம் செலுத்தாமல் அம்மணி நடிப்பிலேயே தீவிரம் காட்டி வருகிறார்.

 

அதே சமயம், சமந்தாவின் கணவர் நாக சைதன்யா ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். திருமணத்திற்குப் பிறகு அவர் நடித்த படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் மனுஷ அப்செட்டாகிவிட்டாராம்.

 

இந்த நிலையில்,  நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஷைலஜா அல்லுடு ஸ்ரீனு’ படத்தின் ரிலீஸ் தேதியை கேரள வெள்ளத்தை காரணம் காட்டி தள்ளி வைத்துள்ளனர்.

 

ஆனால், உண்மையாக அப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதற்கு காரணம் சமந்தா தான் என்று கூறப்படுகிறது. படத்தை பார்த்த சமந்தா, படத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதில் ரொம்பவே கரார் காட்டினாராம். அவரை பேச்சுக்கு மறுப்பு சொல்ல முடியாத நாக சைதன்யா அவர் சொன்ன மாற்றங்களை செய்வதற்காக தான் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டாராம்.

 

ஏற்கனவே தொடர் தோல்விகளை கொடுத்து வரும் நாக சைதன்யாவின் படம் தற்போது குறிப்பிட்ட நேரத்தில் ரிலீஸ் ஆக முடியாமல் போனதால் அவர் மீது தயாரிப்பாளர் சற்று அதிருப்தியடைந்திருக்கிறாராம்.