Sep 10, 2018 11:52 AM

நீச்சல் உடை போட்டோ லீக்! - விளக்கம் அளித்த சமந்தா

நீச்சல் உடை போட்டோ லீக்! - விளக்கம் அளித்த சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா, திருமணத்திற்குப் பிறகும் நடித்த படங்கள் வெற்றி பெற்றதால், அவர் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீச்சல் உடையில் பீச்சில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை சமந்தா, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் திருமணம் முடிந்திருக்கும் சமந்தா, இப்படி மோசமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்திருப்பது சரியல்ல, என்று விமர்சனம் செய்தனர்.

 

Samantha Bikini

 

இந்த நிலையில், தனது நீச்சல் உடை போட்டோவை தானே வெளியிட்டது குறித்து சமந்தா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து கூறிய சமந்தா, ”நான் ஒரு காரணத்துடன் தான் அந்த பீச் போட்டோவை வெளியிட்டேன். ஏனென்றால், ஒரு பெண் இந்த விதிமுறைகளைத்தான் பின் பின்பற்ற வேண்டும் என்பதை உங்கள் மனது தீர்மானிக்க கூடாது.

 

மக்கள் ஒரு பெண் இப்படு தான் உடை அணிய வேண்டும் என மனதில் தீர்மானித்து விடுகின்றனர். தவிர, திருமாண பெண்கள் இதை செய்ய வேண்டும், இதை செய்யக்கூடாது என முடிவு செய்கிறார்கள். இந்த விதிகள் உடைக்கப்பட வேண்டும். 

 

அதில் சில விஷயங்களை நான் உடைத்துள்ளேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே போலத்தான் நான் நானாக இருக்க விரும்புகிறேன்..” என்று தெரிவித்துள்ளார்.