Oct 20, 2018 06:10 PM

வசூலில் அசத்தும் ‘சண்டக்கோழி 2’!

வசூலில் அசத்தும் ‘சண்டக்கோழி 2’!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பில் வெளியாகியுள்ள ‘சண்டக்கோழி 2’ ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

சில விமர்சனங்கள் படத்திற்கு எதிராக இருந்தாலும், படம் பேமிலி ஆடியன்ஸை கவர்ந்துவிட்டதால், இப்படத்திற்கு குடும்ப குடும்பமாக வருகிறார்கள். அதிலும், தென் மாவட்டங்களில் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதோடு, வசூல் ரீதியாகவும் அசத்தி வருகிறதாம்.

 

படம் வெளியான இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.7.5 கோடியை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தெலுங்கில் ரூ.6 கோடி வரை வசூல் செய்ய, எப்படியும் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.18 கோடி வரை ‘சண்டக்கோழி 2’ வசூல் செய்திருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

அதேபோல், இந்த வார் இறுதிக்குள் ‘சண்டக்கோழி 2’-வின் ரூ.35 கோடியை தாண்டும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.