’சரவணன் மீனாட்சி’ ரச்சிதாவுக்கு வந்த பரிதாப நிலை!

சினிமா நடிகைகளைப் போல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகளும் மக்களிடம் பிரபலமடைந்து விடுகிறார்கள். இப்படி டிவி சீரியல் மூலம் பிரபலமானர்களின் பட்டியலில் டாப் லிஸ்ட்டில் இருப்பவர்களில் ரச்சிதாவும் ஒருவர். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சவணன் மீனாட்சி’ தொடரில் பல வருடங்களாக மீனாட்சி வேடத்தில் நடித்து வந்தவர் ரச்சிதா.
தற்போது அவர் நடித்த ‘ராஜா ராணி’ சீரியல் முடிந்துவிட்ட நிலையில், ரச்சிதா வேறு எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் கஷ்ட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குநருடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாகவே அவருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், நடிக்க வாய்ப்பு வராத நிலையில், ரச்சிதா விளம்பரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதற்காக பெண் தொழிலதிபர்கள் தயாரிக்கும் பொருட்களை விளம்பரப் படுத்தும் பணியில் இறங்கியுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கும் ரச்சிதா, பெண்களின் கோரிக்கைகளால் தான் இந்த பணியை செய்யும் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.