Jan 09, 2019 06:49 AM

பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு போட்டியாக ‘சர்கார்’! - விஜய் ரசிகர்களின் அதிரடி

பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு போட்டியாக ‘சர்கார்’! - விஜய் ரசிகர்களின் அதிரடி

அஜித்தின் பேட்ட, ரஜினியின் விஸ்வாசம் ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இருவரது ரசிகர்களும் முதல் நாளான்று கொண்டாட காத்திருக்கிறார்கள். அதே சமயம், விஜய் ரசிகர்களும் பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்பது அனைத்து விஜய் ரசிகர்களையும் உற்சாகமடைய செய்துள்ளது.

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘சர்கார்’ பல சர்ச்சைகளை கடந்து பல சாதனைகளையும் நிகழ்த்தி மாபெரும் வெற்றிப் படமாகியுள்ளது. தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வசூலை ஈட்டியிருக்கும் சர்கார் சுமார் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

 

தற்போது சர்கார் படம் 75 வது நாளை கடந்து வெற்றிகரமாக சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். புதுப்படம் ரிலீஸ் ஆவது போல ‘சர்கார்’ படத்தின் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கும் விஜய் ரசிகர்கள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் இதனை கொண்டாடவும் உள்ளார்கள்.

 

பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களின் கொண்டாட்டங்களையே மிஞ்சும் அளவுக்கு விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த ‘சர்கார்’ சிறப்பு காட்சி மற்றும் கொண்டாட்டத்திற்கான டிக்கெட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.