முன்னணி ஹீரோயினுக்கு ரூ.1 கோடி கொடுத்த சசிகுமார்!

இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்று ஒரே சமயத்தில் மூன்று அவதாரங்களை எடுத்த சசிகுமார், தொடர்ந்து நடிப்பதிலும் படம் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தவர், தொடர் தோல்விப் படங்களினால் தயாரிப்பதை சற்று தவிர்த்து, பிற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே, சசிகுமார் தயாரித்து நடித்து மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். எப்போதும் அறிமுக நடிகைகளை தனது படங்களில் ஹீரோயினாக்கும் சசிகுமார், இந்த படத்தில் முன்னணியில் இருக்கும் கீர்த்தி சுரேஷை ஹீரோயினாக்கியிருக்கிறார். இதற்காக கீர்த்தி சுரேஷுக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கொம்பு வச்ச சிங்கம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஆரம்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.