Sep 17, 2018 12:26 PM

சிவாவின் படங்களிலேயே குறைந்த வசூல் படம் ‘சீமராஜா’ - திரையரங்கத்தின் அதிர்ச்சி தகவல்

சிவாவின்  படங்களிலேயே குறைந்த வசூல் படம் ‘சீமராஜா’ - திரையரங்கத்தின் அதிர்ச்சி தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘சீமராஜா’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை வெளியான சிவகார்த்திகேயன் படங்களிலேயே ‘சீமராஜா’ மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு படம் பிடித்திருப்பதாகவும், சென்னை உள்ளிட்ட பல படங்களி ஹவுஸ்புல் காட்சிலாக படம் ஓடிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இப்படி ‘சீமராஜா’ குறித்து பாசிட்டிவான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், திரையரங்க உரிமையாளர் ஒருவர் நெகட்டிவான தகவல் ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியடை செய்துள்ளார்.

 

அதாவது, சிவகார்த்திகேயன் படங்களிலேயே குறைவான ஓபனிங் பெற்ற படம் ‘சீமராஜா’ தான் என்று, சென்னை ரோகினி திரையரங்க உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து ட்விட்டரில் வெளியிடப்பட்ட தகவலில், சிவகார்த்திகேயன் படங்களிலேயே குறைந்த ஓபனிங் பெற்ற படம் சீமராஜா தான். விநியோக பிரச்சினையால் படத்தை சில காட்சிகள் திரையிடாமல் போனதும் இதற்கு ஒரு காரணம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.