Nov 04, 2018 07:16 AM

பிரபல சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மரணம்!

பிரபல சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மரணம்!

சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வந்த  நடிகர் விஜயராஜ், இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43.

 

சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பு பெற்ற ‘மெட்டி ஒலி’ மெகா தொடர் மூலம் சின்னத்திரையில் நடிக்க தொடங்கிய விஜய்ராஜ், தொடர்ந்து நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்ததோடு, சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், பழனியில் உள்ள தனது வீட்டில் இருந்த விஜயராஜுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுட்டு உயிரிழந்துள்ளார்.

 

இவரது மரண செய்தி கேட்டு தின்னத்திரை கலைஞர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.