Jul 18, 2018 12:56 PM

சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை! - காரணம் இது தான்

சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை! - காரணம் இது தான்

‘வம்சம்’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியங்காவின் தற்கொலை சீரியல் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த பிரியங்கா ‘என் இனிய தோழியே’, ‘சபீதா’ ஆகிய தொடர்களில் நடித்திருந்தாலும் ‘வம்சம்’ சீரியல் தான் அவரை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது. மேலும் சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், இன்று நடிகை பிரியங்கா வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டு படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூடைப்பந்து பயிற்சியாளரை திருமணம் செய்துக்கொண்ட பிரியங்கா, கடந்த மூன்று மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

 

பிரியங்காவின் தற்கொலை குறித்து அவரது கணவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Priyanka

 

பிரியங்காவின் கணவர் பள்ளிகளில் கூடைப்பந்து போட்டிகளை நடத்தி வந்ததன் மூலம் பல சினிமா பிரபலங்களுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அதன்பேரில் தான் அவர், பிரியாங்காவுக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்புகளை வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனால், பிரியங்கா நடிக்க தொடங்கியதுமே கணவன், மனைவி இடையே விரிசல் ஏற்பட்டதாம். மேலும், குழந்தை இல்லாத காரணத்தாலும் பிரியங்கா ரொம்பவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இத்துடன் ஏற்கனவே ஒரு முறை பிளேடால் கையை அறுத்துக் கொண்டு பிரியங்கா தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். அப்போதே போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்களாம்.

 

Priyanka