Mar 10, 2021 08:07 AM

28 வயது வாலிபரை திருமணம் செய்துக் கொண்ட ஷகிலா! - வைரலாகும் புகைப்படம்

28 வயது வாலிபரை திருமணம் செய்துக் கொண்ட ஷகிலா! - வைரலாகும் புகைப்படம்

ஆபாச பட நடிகையான ஷகிலா, தற்போது அதுபோன்ற படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு குணச்சித்திர வேடங்களிலும், காமெடி வேடங்களிலும் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே, டிவி நிகழ்ச்சிகளில் நடிக்க தொடங்கியிருக்கும் ஷகிலாவுக்கு ‘குக் வித் கோமாளி’ பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்திருப்பதோடு, அவர் மிதான தவறான இமேஜை உடைத்து, அவரையும் ஒரு நடிகையாக அங்கீகரித்துள்ளது. மேலும், ஷகிலாவுக்கான புதிய ரசிகர் வட்டமும் சமூக வலைதளங்களில் உருவாகியுள்ளது.

 

இந்த நிலையில், நடிகை ஷகிலா 28 வயதுடைய இளைஞர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டதாகவும், அந்த இளைஞர் பொறியியல் பட்டதாரி என்றும் ஒரு தகவல் பரவி வருவதோடு, அந்த இளைஞருடன் ஷகிலா இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

 

Shakila

 

இது குறித்து விசாரித்ததில், இது சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பரவிய தகவல். குக் வித் கோமாளி மூலம் ஷகிலா பிரபலமடைந்திருப்பதால், அவரைப் பற்றிய தவறான தகவல்களை சிலர் மீண்டும் பரப்பி வருகிறார்கள், என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.