விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன்!

தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான ‘96’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றிருக்கிறது. ரசிகர்கள் மட்டும் இன்றி சினிமா பிரபலங்களும் இப்படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், நயந்தாரா, திரிஷா என்று முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி சேர தொடங்கியுள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக ஸ்ருதி ஹாசனுடன் ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனைச் சேர்ந்தவுடன் காதல் வயப்பட்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். அவர் விரைவில் லண்டன் இளைஞரை திருமணம் செய்துக் கொண்டு லண்டனில் செட்டில் ஆகப்போவதாகவும், அதனால் தான் எந்த புது படத்திலும் அவர் ஒப்பந்தமாகவில்லை என்றும் கூறப்பட்டது. மேலும், தனது லண்டன் காதலரை தனது தாய்க்கு அறிமுகப்படுத்தி வைத்த ஸ்ருதி ஹாசன், தனது அப்பா கமல்ஹாசனிடமும் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதியின் புதிய படத்தில் ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாம்.