Aug 15, 2020 05:54 PM

மதுவுக்கு அடிமையான பாடகி சுசித்ரா - ஷாக்கிங் வீடியோ லீக்

மதுவுக்கு அடிமையான பாடகி சுசித்ரா - ஷாக்கிங் வீடியோ லீக்

பிரபல பின்னணி பாடகி சுசித்ரா, சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் பற்றி ஆபாசமாக பதிவிட்டதோடு, சில அந்தரங்க புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதையடுத்து, சினிமாவில் எந்த பிரபலங்கள் எந்த எந்த நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தார்கள், என்ற ஆதாரங்களை வெளியிடப் போவதாக கூறிய அவர், சுசீ லீக் என்ற பெயரில் தினந்தோறும் பல அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சுசித்ராவின் சோசியல் மீடியா பக்கம் தடை செய்யப்பட்டது.

 

மேலும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக, அவரது கணவர் கூறினார். பிறகு வேறு சிலர் அவரது சோசியல் மீடியா பக்கத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், சிறிது காலம் சுசித்ரா வெளிநாட்டில் தங்கியிருந்தார். பிறகு இந்த பிரச்சினை முடிந்தது.

 

இந்த நிலையில், தற்போது மீண்டும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாகியிருக்கும் சுசித்ரா, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏழை மாணவர்களின் கல்விக்கு ரேடியோ மிர்ச்சி உதவி செய்ய இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு அனைவரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

 

இந்த வீடியோவால் சிசித்ரா மீண்டும் வந்துவிட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ந்த நிலையில், சுசித்ராவின் சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

அதாவது நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய சுசித்ரா, மதுவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியதற்கான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மது பாட்டில்களை வரிசையாக வைத்து பாட்டு பாடி தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

 

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருப்பதோடு, சுசித்ரா மதுவுக்கு அடிமையாகிவிட்டதாகவும், கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

 

இதோ அந்த வீடியோ,