Oct 12, 2018 12:01 PM

வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பாடகிகள் - பட்டியல் வெளியிட்ட சின்மயி

வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பாடகிகள் - பட்டியல் வெளியிட்ட சின்மயி

பின்னணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து பல பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். ஆனால், வைரமுத்து இதனை மறுத்தாலும், சின்மயி மேலும், மேலும் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிவதோடு, அது தொடர்பான சம்பவங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொள்கிறார். 

 

சின்மயின் இத்தகைய நடவடிக்கைக்கு பலர் ஆதரவு தெரிவிப்பதை போல, பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், தன்னைப் போல பல பாடகிகள் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் சின்மயில், அவர்களும் தைரியமாக தங்களுக்கு நடந்த கொடுமை குறித்து வெளியே பேச முன் வர வேண்டும், என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

 

இது தொடர்பாக இன்று தனது சமூக வலைதளபக்கத்தில் விரிவாக பேசிய சின்மயி, “நான் ஒரு அரசியல் கட்சியின் தூண்டுதலின் பேரில் இதையெல்லாம் செய்கிறேன், என்று கூறுபவர்கள், சம்பவம் நடந்த போதே புகார் தெரிவிக்காமல், இப்போது ஏன் கூறுகிறேன், என்று கேட்கிறார்கள். வைரமுத்துவுக்கு இருக்கும் அரசியல் பலத்தை பார்த்து தான் நான், இதை அப்போது சொல்லவில்லை. மேலும், ஒரு சில மீடியாக்கள் மட்டும் இருந்த அந்த காலக்கட்டத்தில் இந்த செய்தி வெளியேவே வந்திருக்காது. தற்போது பாலியல் தொல்லை குறித்து பலர் வெளிப்படையாக பேசுவதால், நானும் தையரியமாக பேசுகிறேன்.

 

என்னைப் போல பல பாடகிகள் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும், தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் தைரியமாக பேச வேண்டும். 

 

திருமணத்தில் வைரமுத்துவிடம் ஆசி வாங்கியதை கிண்டல் செய்கிறார்கள். திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்க பட்டியல் போடும் போது சினிமா பிஆர்.ஓக்கள் முதல் பெயராக வைரமுத்து பெயரைத் தான் சொல்வார்கள். நான் வேண்டாம் என்று சொன்னால் அது தவறாகிவிடும். என்னைப் போல பல பாடகிகள் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதுபற்றி தைரியமாக வெளியில் சொல்ல முன்வரவேண்டும்.

 

எனது ஒழுக்கத்தை பற்றி பேசுகிறார்கள். நான் ஒழுக்கமானவள் தான். இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் பயப்படாமல் தான் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளேன்.

 

நான் தனி ஆள் இல்லை. என்னைப் போல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் சேர்த்தே குரல் கொடுக்கிறேன். ‘மீ டூ’ மூலம் கற்பழிப்பு புகார்கள் கூட வெளியில் வருகின்றன. அது வழக்காக மாறி இருக்கிறது.

 

பெண்கள் சமூகத்தில் உடன் பழகும் பல ஆண்கள் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். அதை அவர்கள் வெளிப்படுத்த நாம் இடம் கொடுப்பதில்லை. ஆண்களுக்கு கூட சிறுவர்களாக இருந்தபோது தொல்லைக்கு ஆளாகி உள்ளனர். குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு, சிறுமிகளுக்கு அதிகமாக நடக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.