Sep 19, 2018 06:15 AM

விஷால் இயக்குநருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்!

விஷால் இயக்குநருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘சீமராஜா’ பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததால் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், சிவகார்த்திகேயன் படங்களிலேயே இந்த படம் தான் குறைவான வசூல் செய்திருப்பதாகவும் சில திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

 

அதே சமயம், தயாரிப்பு தரப்பில் இருந்து, படம் மிகப்பெரிய வெற்றி என்றும், சிவகார்த்திகேயனின் படங்களிலேயே மிகப்பெரிய வசூல் ஈட்டியது ‘சீமராஜா’ என்றும் தெரிவித்துள்ளார்கள். எது எப்படியோ, ‘சீமராஜா’ படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த காமெடி சற்று குறைவு என்பது தான் உண்மை.

 

‘சீமராஜா’ படத்திற்கு பிறகு ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன், ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஜேஷ் இயக்கும் படத்தில் நயந்தாரா ஹீரோயினாக நடிக்க, ரவிகுமார் இயக்கும் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். 

 

இந்த இரண்டுப் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார். விஷாலை வைத்து ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கியவர் தான் இந்த பி.எஸ்.மித்ரன்.

 

24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.