Oct 02, 2018 06:03 PM

குழந்தைகள் திரைப்படத்தில் புதுமையான வேடத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா!

குழந்தைகள் திரைப்படத்தில் புதுமையான வேடத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா!

‘மாயா’, ‘மாநகரம்’ போன்ற தரமான வெற்றிப் படங்களை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், ‘ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கும் படம் ‘மான்ஸ்டர்’.

 

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்க, பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். குழந்தைகளுக்கான படமாக உருவாகும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா இதுவரை நடித்திராத புதுமையான வேடத்தில் நடித்திருக்கிறார்.

 

Priya Bhavani Shankar

 

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார். ஷங்கர் சிவா கலையை நிர்மாணிக்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இசை வெளியீட்டு விழாவும் அதனை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளது.

 

Monster