Oct 01, 2018 08:18 AM

பிக் பாஸ் பட்டத்தை வென்ற ரித்விகா பற்றி தெரியாத சில தகவல்கள்!

பிக் பாஸ் பட்டத்தை வென்ற ரித்விகா பற்றி தெரியாத சில தகவல்கள்!

கமல்ஹாசன் நடத்தி வந்த டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 2-வின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. நேற்று காலையே நாம் தெரிவித்தது போல ரித்விகா தான் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

 

ரித்விகாவுக்கு ஏகப்பட்டோர் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, பிக் பாஸ் அவரையே போட்டியாளராக தேர்வு செய்தார். இதனால் ஒட்டு மொத்த தமிழகமே மகிழ்ச்சிடையந்துள்ளது.

 

இதற்கிடையே, பிக் பாஸ் டைடிலை வென்ற ரித்விகா குறித்த சில தகவல்களை பார்ப்போம்.

 

ஆகஸ்ட் 5, 1992ம் ஆண்டு பிறந்துள்ளார், படிப்பிலும் ரித்விகா சூப்பர், B.sc Physics முடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆசை இருந்ததால் சின்ன சின்னதாக நிறைய குறும்படங்களில் நடித்துள்ளார்.

 

பின் அவருடைய நடிப்பிற்கு அங்கீகாரம் கொடுத்த படம் பாலா இயக்கிய பரதேசி. பின் விக்ரமனின் நினைத்தது யாரோ என்ற படத்திற்காக துணை நடிகைக்கான விருது எல்லாம் பெற்றார்.

 

அடுத்தடுத்து ரஜினியின் கபாலி, விக்ரமின் இருமுகன் போன்ற படங்களில் நடித்து வெற்றி கண்டார்.

 

கடைசியாக இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கூட சதாவுடன் இவர் நடித்த லார்ச்லைட் என்ற படம் வெளியாகி இருந்தது.