Jul 17, 2018 01:47 PM

ஸ்ரீரெட்டி வெளியிட்ட நடிகைகள் பட்டியல்! - கலக்கத்தில் முன்னணி நடிகைகள்

ஸ்ரீரெட்டி வெளியிட்ட நடிகைகள் பட்டியல்! - கலக்கத்தில் முன்னணி நடிகைகள்

தமிழகத்தில் உருவாகும் புழல் ஆந்திராவில் மையம் கொண்டு கரையை கடப்பது தான் வழக்கம். ஆனால், நடிகை ஸ்ரீரெட்டியின் விஷயத்தில், ஆந்திராவில் மையம் கொண்ட புழல் தற்போது தமிழகத்தில் மையம் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு நடிகர், ஒரு இயக்குநர் என்று செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.

 

இந்த நிலையில், இன்று அவர் நடிகைகள் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

 

ஸ்ரீரெட்டி லீக்ஸ் என்று அவரது பதிவுகள் வைரலாகும் நிலையில், அவர் இன்று முன்னணி நடிகைகள் குறித்து பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதால், தற்போது நடிகைகள் ஏரியாவிலும் பெரிய கலவரம் ஏற்பட்டுள்ளது.

 

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கும் பதிவில், நிறைய பேர் எனக்கு மட்டும் தான் இதுபோல் தவறான விஷயங்கள் அதிகம் நடந்துள்ளது என்று நினைக்கிறார்கள், ஆனால் என்னுடையது மிகவும் சிறியது.

 

நயந்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகைகள் வெளியே சொல்ல ஆரம்பித்தால் அதிகம் தெரியும், என்று தெரிவித்துள்ளார்.

 

Nayanthara