Dec 22, 2018 09:54 AM

’ராஜா ராணி’ ஆல்யா மானசாவின் காதலருக்கு திடீர் நிச்சயதார்த்தம்!

’ராஜா ராணி’ ஆல்யா மானசாவின் காதலருக்கு திடீர் நிச்சயதார்த்தம்!

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம்  மக்களிடம் பிரபலமானவர் ஆல்யா மானசா. சீரியலில் நடிப்பதோடு, டப்மாஸ் மூலமாகவும் மக்களிடம் ரீச் ஆன இவருக்கு ரசிகர்கள் ஏராளாம். இதனால் ரசிகர்களிடம் இருந்து தினமும் இவருக்கு பரிசுகள் வந்துக்கொண்டே இருக்கும். இந்த பரிசுகளை இவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டும் வருகிறார்.

 

இப்படி மக்கள் விரும்பும் பிரபலமாக மாறியுள்ள ஆல்யா மானசா, தற்போது ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடிக்கும் சஞ்சயை காதலிக்கிறார். இவர்கள் முதலில் தங்களது காதலை மறுத்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலிப்பதை ஒப்புக்கொண்டனர். மேலும், இருவரும் ஜோடியாகவும், நெருக்கமாகவும் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

 

Alya Manasa and Sanjeev

 

அதே சமயம், சஞ்வீவை காதலிப்பதற்கு முன்பாக மானஸ் என்பவரை ஆல்யா மானசா காதலித்து வந்தார். ஆனால், இவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் பிரிந்து விட்டார்கள். பிறகு மானஸ் சுபிக்‌ஷா என்பவரை காதலிக்க, மானசாவும் தற்போது சஞ்சீவை காதலிக்க தொடங்கியுள்ளார்.

 

இந்த நிலையில், ஆல்யா மானசாவின் முன்னாள் காதலரான மானஸுக்கும், சுபிக்‌ஷாவுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இரு தரப்பின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துக்கொண்டார்கள்.

 

Alya Manasa and Manas