சன் மியூசிக் மகேஸ்வரியின் படு கவர்ச்சி புகைப்படம் - உறைந்து போன ரசிகர்கள்

தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் பிரபலமாக இருப்பவர்களில் சன் மியூசிக் மகேஸ்வரியும் ஒருவர். பல ஆண்டுகளாக சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றிய இவர், தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.
தொகுப்பாளினியாக இருப்பதோடு, பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வரும் மகேஸ்வரி, திருமணத்திற்குப் பிறகு தனது பணிக்கு ஓய்வு கொடுத்தவர், குழந்தை பிறந்த உடன் மீண்டும் பணிக்கு திரும்பி விட்டார். இந்த முறை தொகுப்பாளினியாக இருப்பதோடு, திரைப்படங்களில் நடிப்பதிலும் தீவிரம் காட்டி வருபவர், அதற்காக சமீபத்தில் தனது புகைப்பட தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்.
புடவையில் சற்று கவர்ச்சியாக இருந்த அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், மகேஸ்வரி தற்போது கூடுதல் கவர்ச்சியோடு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்ப்பவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போகும் அளவுக்கு படு கவர்ச்சியாக அதில் மகேஸ்வரி இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்,