Jan 01, 2019 06:07 AM

சூர்யாவின் புது படத்தின் தலைப்பு ‘காப்பான்’!

சூர்யாவின் புது படத்தின் தலைப்பு ‘காப்பான்’!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திற்காக ‘காப்பான்’, ‘மீட்பான்’, ‘உயிர்கா’ ஆகிய மூன்று தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ‘காப்பான்’ என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பை பஸ்ட் லுக் போஸ்டருடன் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று 12.10 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

இதில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஹீரோயினாக சாயிஷா நடிக்கிறார். 

 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீத முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு ஜனவரி 17 ஆம்  தேதி முதல் தொடங்க உள்ளது.

 

Kaappan