Jan 01, 2019 06:41 AM

அமெரிக்க வாலிபரை காதலிக்கும் தமன்னா! - பிரபல ஹீரோ வெளியிட்ட தகவல்

அமெரிக்க வாலிபரை காதலிக்கும் தமன்னா! - பிரபல ஹீரோ வெளியிட்ட தகவல்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உள்ள தமன்னா, தமிழில் ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்திருக்கிறார் இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே, தமன்னாவின் காதல் விவகாரம் குறித்து பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவர் பிரபல நடிகரும் இயக்குநருமான ஒருவரை காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்க வாலிபர் ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதை மறுத்திருக்கும் தமன்னா, அமெரிக்க வாலிபரை தான் காதலிப்பதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வதந்தி, என்று தெரிவித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டி பிரபல தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் உதயநிதியும், தமன்னாவும் கலந்துக்கொண்டார்கள். அப்போது இளைஞர்கள் பலர் தமன்னாவை கவர பல்வேறு யுக்திகளை செய்தார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த உதயநிதி, இப்படி எல்லாம் தமன்னாவை இம்பரஷ் செய்ய முயற்சிக்கிறீர்களே, “அவருக்கு அமெரிக்காவில் பாய் பிரண்ட் ஒருவர் இருக்கிறார், அது தெரியுமா?” என்று கூறினார். உடனே ஷாக்கான தமன்னா உதயநிதியை முறைக்க, சுதாரித்துக் கொண்ட உதய், “அப்படினு நிறைய வதந்திகள் வருது” என்று கூறிவிட்டார்.

 

Udhayanithi

 

தமன்னாவும், பத்திரிகைகள் சேர்ந்து எனக்கு கொடுத்த காதலர் தான் அந்த அமெரிக்க வாலிபர், அவரை நான் கூட இன்னும் பார்க்கவில்லை, என்று கூறி சிரித்தார்.