May 03, 2020 05:41 PM

பாகிஸ்தானியரை மணக்கும் தமன்னா! - வைரலாகும் புகைப்படம் இதோ

பாகிஸ்தானியரை மணக்கும் தமன்னா! - வைரலாகும் புகைப்படம் இதோ

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னாவுக்கு, தற்போது தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை என்றாலும், தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது கொரோனா பாதிப்பால் வீட்டில் இருக்கும் தமன்னா, சமீபத்தில் தலையணையை உடையாக அணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டார்.

 

இதற்கிடையே, தமன்னாவின் திருமணம் குறித்து அவ்வபோது பல தகவல் வெளியாகி வைரலானாலும், அதனை அவர் வதந்தி என்று மறுப்பும் தெரிவித்து வந்தார்.

 

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான அப்துல் ரசாக்கை நடிகை தமன்னா திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியானதோடு, அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

ஆனால், வழக்கம் போல இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் தமன்ன தரப்பு, துபாயில் நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமன்னாவும், கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கும் கலந்துக் கொண்டார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து இப்படி வதந்தி பரப்பு வருகிறார்கள், என்று தெரிவித்துள்ளனர்.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Tamanna and Abdul Razaaq