Sep 11, 2018 03:02 PM

அமெரிக்காவில் செக்யூரிட்டியாக வேலை பார்த்த பழம்பெரும் தமிழ் நடிகை!

அமெரிக்காவில் செக்யூரிட்டியாக வேலை பார்த்த பழம்பெரும் தமிழ் நடிகை!

கடந்த 1973 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கிய ‘அரங்கேற்றம்’ திரைப்படம், சர்ச்சைகளையும் தாண்டி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தமிழ் சினிமாவின் சிறந்த படங்களின் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்த படமமாகவும் உள்ளது.

 

இப்படத்தில், குடும்ப சூழல் காரணமாக விபச்சார தொழிலில் ஈடுபடும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை பிரமிளா. தைரியமாக இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்த இவரது நடிப்பு அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. இதை தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர வேடம் மற்றும் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் என ஏராளமான மொழிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

 

பிறகு டிவி தொடர்களில் நடித்து வந்தவர், திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டதுடன், அமெரிக்காவிலும் செட்டில் ஆகிவிட்டார்.

 

இந்த நிலையில், அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ள நடிகை பிரமிளா, அங்கு செக்யூரிட்டியாக வேலை செய்து வந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 

Actress Pramila Latest Photos

 

அமெரிக்க டாலர்கள் அச்சடிக்கப்படும் அந்நாட்டு அரசு நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக கடந்த 25 வருடங்கள் பிரமிளா பணியாற்றியுள்ளாராம். இதற்காக 2 வருடங்கள் பிரத்யேக பயிற்சி எடுத்துக் கொண்டவர், துப்பாக்கி சுடுதல், டாலர் எடுத்து செல்லும் வாகனத்தை ஓட்டுதல், வழியில் எதாவது பிரச்சினை வந்தால் அதை எப்படி சமாளிப்பது உள்ளிட்டவைகளை கற்றுக்கொண்டு, தேர்வு எழுதி அந்த பணியில் சேர்ந்தாராம்.

 

தற்போது, தனது செக்யூரிட்டி பணியில் இருந்து ஓய்வு பெற்றிருப்பவர், தனது வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் பழத்தோட்டத்தை வைத்து பராமரிப்பதோடு, வேட்டை ஆடுவதற்கு லைசென்சு பெற்று வேட்டை ஆடுவதை பொழுதுபோக்காக செய்து வருகிறாராம். 

 

கை நிறைய ஓய்வுதியம், கணவருடனான நிறைவான காதல் என்று தற்போது தனது ஓய்வு நாட்களை சந்தோஷமாக கழித்து வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை பிரமிளா கூறியுள்ளார்.