Sep 18, 2018 07:17 AM

தமிழகத்தின் மா மனிதன் விருது பெற்ற ஆசிரியர் பகவான், எடிட்டர் லெனின்!

தமிழகத்தின் மா மனிதன் விருது பெற்ற ஆசிரியர் பகவான், எடிட்டர் லெனின்!

2017 ஆம் ஆண்டின் ’தமிழகத்தின் மா மனிதன்’ விருது ஆசிரியர் பகவான் மற்றும் திரைப்பட எடிட்டர் லெனின் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

 

தமிழ் இலக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வழங்கப்படும் ‘தமிழகத்தின் மா மனிதன்’ விருது வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் நடைபெற்றது.

 

B Lenin

 

திருவள்ளூர் அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் தங்கள் ஆசிரியரை பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு செல்ல கூடாது என பாசப்போராட்டம் நடத்திய ஆசிரியர் பகவான் அவர்களுக்கும், திரைப்பட எடிட்டர், நடிகர், இயக்குநர் எளிமையை வலிமையாக கொண்டு தயாரிப்பாளர்களின் உற்ற தோழனாகவும் இருக்கும் பி.லெனின் இருவருக்கும், 2017 ஆம் ஆண்டின் ’சிறந்த மா மனிதன்’ விருதினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன், வணிசங்க பேரவையின் மாநில பொதுச்செயலாளர் தேவராஜ், தமிழ் இலக்க திரைப்பட குறும்பட ஆவணபட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி சேகரன்ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.

 

விழாவுக்கு வந்தவர்களை மக்கள் தொடர்பாளர்கள் விஜயமுரளி, கிளாமர் சத்யா, வெங்கட், கணேஷ்குமார், ஆறுமுகம் ஆகியோர் வரவேற்றனர். 

 

PRO