தமிழகத்தின் டாப் கலெக்ஷன் ஹீரோ! - முதலிடத்தை இழந்த முன்னணி ஹீரோக்கள்

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் ஏராளமானவர்கள் இருப்பது போல, இவர்களுக்கு ரசிகர்களும் ஏராளமாக இருப்பதால், இவர்களது படங்களுக்கு சிறப்பான ஓபனிங் இருப்பதோடு, வசூல் ரீதியாக இவர்களது படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்று வருகிறது.
இதற்கிடையே, 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தோடு, தமிழகத்தில் அதிகமான வசூல் ஈட்டிய படங்களில் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் யாருமே முதலிடத்தை பிடிக்கவில்லை, மாறாக தெலுங்கு ஹீரோ பிரபாஸ் தான் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
இதோ அந்த பட்டியல்,
பாகுபலி 2 - ரூ.150 கோடி (தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி)
மெர்சல் - ரூ. 128 கோடி
சர்கார் - ரூ.128 கோடி (இரண்டு வார கலெக்ஷன்)
எந்திரன் - ரூ.95 கோடி
தெறி - ரூ.78 கோடி
ஐ - ரூ.74 கோடி
கபாலி - ரூ.73 கோடி
வேதாளம் - ரூ.72 கோடி
துப்பாக்கி - ரூ.70 கோடி
கத்தி - ரூ.67 கோடி