2 வது வெர்சனை தொடங்கிய தாடி பாலாஜியின் மனைவி நித்யா! - ரசிகர்கள் வரவேற்பு

காமெடி நடிகர் தானி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தாடி பாலாஜி தன்னை கொடுமை படுத்துவதாக நித்யா புகார் கூற, நித்யா அவரது நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு தனக்கு துரோகம் செய்வதாக பாலாஜியும் மாறி மாறி புகார் கூறினார்கள்.
இவர்களது விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றதோடு, பாலாஜி ஒரு சைக்கோ என்பது போல சித்தரித்த வீடியோ ஒன்று வெளியாகி, அதில் அவர் நித்யாவையும், அவரது குழந்தையையும் வைத்து தீ வைப்பது போலவும் இருந்தது. இதையடுத்து, காவல் துறை மூலம் இருவரும் பிரிந்து வாழ தொடங்கிய நிலையில் விவாகரத்துக்கும் முறையிட்டார்கள்.
இதற்கிடையில், பிக் பாஸ் இரண்டாம் சீசனில் பங்கேற்ற தாடி பாலாஜியும், அவரது மனைவியும் அந்த நிகழ்ச்சி மூலம் தங்களது பகையை மறந்து ஒன்று சேர்ந்தார்கள். தற்போது இருவரும் மீண்டும் இணைந்து வாழ தொடங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில், தாடி பாலாஜியின் மனைவி நித்யா, தனது புதிய புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விமானப் பணி பெண் போன்ற உடை மற்றும் மேக்கப் போட்டிருக்கும் அவர், ’ஐம் நிதி வெர்சன் 2.0 ரீலோடெட்..” என்றும் பதிவு செய்திருக்கிறார்.
நித்யாவின் இந்த புகைப்படத்திற்கும், அவரது பதிவுக்கும் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.
நித்யாவும் அவரின் மகள் போஷிகாவும் தங்கள் தலை முடியை கத்தரித்து கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் செய்வதற்காக தானம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Be the best of what U r !!
— Nithya-Dheju S (@DhejuWE) November 25, 2018
Am nithi..... Version 2.0 .... Reloaded..... #BeU #WE pic.twitter.com/nB6tmNO06P