Dec 27, 2018 02:46 AM
வெளிநாட்டு நடிகைக்கு இந்தியாவில் நடந்த சோகம்!

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நடிகை ஒருவர் போஜ்பூரி படம் ஒன்றில் நடிப்பதற்காக இந்தியா வந்துள்ளார். ஹீரோ வெளிநாட்டு பெண் மீது காதலில் விழுவது போல கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு கய்மூர் என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அந்த வெளிநாட்டு நடிகை அப்படத்தின் இயக்குநருடன் மார்க்கெட்டுக்கு சென்ற போது, தரமராஜ் சிங் என்பவர், அந்த நடிகையை வழிமறித்து ஆபாச்சமாக பேசியதோடு, தகாத சில சைகைகளையும் செய்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை, அந்த நபர் மீது கைமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகையின் புகாரை தொடர்ந்து தர்மராஜ் சிங் மீது, இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விஷயத்தை அறிந்த அவர், தலைமறைவாகிவிட, போலீசார் அவரை தேடி வருகிறார்களாம்.