Jan 14, 2021 11:24 AM

‘தேசிய தலைவர்’ படத்தின் டீஸர் லீக்! - அதிர்ச்சியில் படக்குழு

‘தேசிய தலைவர்’ படத்தின் டீஸர் லீக்! - அதிர்ச்சியில் படக்குழு

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.

 

’ஊமை விழிகள்’ புகழ் அரவிந்தராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

 

 

இந்த படத்துக்கான டீசரை பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்ட மிட்டிருந்தது. அதற்குள்  படத்தின் டீஸர் சோசியல் மீடியாவில் நேற்று லீக் ஆனது. உடனடியாக களத்தில் இறங்கிய படக்குழு, இதற்கு காரணம் படத்தின் எடிட்டர் தான், என்பதை கண்டுபிடித்து அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டது.

 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான்  மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் லீக் ஆகி சோசியல் மீடியாவில் வைரல் ஆன நிலையில், தற்போது ‘தேசிய தலைவர்’ படத்திற்கும் இப்படி சம்பவம் நடந்திருப்பது திரைத்துறையினரை அதிர்ச்சிய்டைய செய்துள்ளது.