Aug 12, 2019 05:26 AM

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்! - வெளியான ரகசியம்

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்! - வெளியான ரகசியம்

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 50 நாட்களை கடந்திருக்கும் நிலையில், இந்த முறை யார் டைடில் வின்னராக வருவார்? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய எலிமினேட்டில் ஏற்கனவே சொன்னது போல சாக்‌ஷி வெளியேற்றப்பட்டுவிட்டார். தற்போது இருக்கும் போட்டியாளர்களில் அடுத்ததாக வெளியேறப் போவது அநேகமாக மதுமிதாவாக தான் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், பிக் பாஸ் டைடில் வின்னர் பற்றிய தகவலும் கசிந்துள்ளது. பிக் பாஸ் 3 யின் டைடில் வின்னராக தர்ஷன் தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. சக போட்டியாளர்களும் இதை ஏற்றுக் கொண்டாலும், தர்ஷனுக்கு ரசிகர்களிடையே மவுசு அதிகரித்து வருகிறது.

 

மேலும், பிக் பாஸ் முதல் சீசனில் ஆரவ் டைடில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் சீசனில் நடிகை ரித்விகா வெற்றி பெற்றார். இந்த மூன்றாவது சீசனில் நிச்சயம் வெற்றியாளராக ஆண் போட்டியாளர் தான் இருப்பார். அப்படி பார்த்தால், கவின் பிக் பாஸ் சீசன் 3 டைடிலை நிச்சயம் கைப்பற்றுவார் என்று கூறப்படுகிறது.

 

Darshan Big Boss

 

அதே சமயம், கவின் சாண்டி ஆகியோரும் டாப் 3 லிஸ்ட்டில் இடம்பெறுவார்கள் என்று பிக் பாஸ் போட்டியாளர்களே எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால், கவின் அடுத்த எலிமினேஷன் ரவுண்டில் வெளியேற்றப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.