Sep 04, 2018 08:31 AM

தமிழ் சினிமாவின் விக்கிபீடியாவான ‘துளசி சினிமா நியூஸ்’!

தமிழ் சினிமாவின் விக்கிபீடியாவான ‘துளசி சினிமா நியூஸ்’!

எந்த விஷயமாக இருந்தாலும், எது பற்றிய தகவல் வேண்டுமானாலும் கிடைக்ககூடிய விக்கிபீடியாவில் கூட கிடைக்காத தமிழ் சினிமா தகவல்களை வழங்கும் தமிழ் சினிமாவின் புதிய தகவல் களஞ்சியமாக உருவெடுத்திருக்கிறது ‘துளசி சினிமா நியூஸ்’.

 

சினிமா பி.ஆர்.ஓ சங்கத்தின் செயலாளர் பெருதுளசி பழனிவேல் நடத்தி வரும் இந்த ‘துளசி சினிமா நியூஸ்’ புத்தகத்தில் ஒவ்வொரு மாதமும் வெளியாகும் திரைப்படங்களின் விபரங்கள், நடிகர் நடிகைகளின் விபரங்கள் மட்டும் இன்றி, பழம்பெரும் நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் பற்றி இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன.

 

இதுவரை வெளியான திரைப்படங்களின் பட்டியல் மட்டும் இன்றி, இனி வெளியாகப் போகும் திரைப்படங்களின் பட்டியல், சென்சாருக்காக காத்திருக்கும் திரைப்படங்களின் பட்டியல் என்று தமிழ் சினிமாவின் தகவல்கள் அனைத்தையும் புள்ளி விபரத்தோடு வழங்கி வரும் ‘துளசி சினிமா நியூஸ்’ தற்போதைய தமிழ் சினிமாவின் விக்கிபீடியாவாக உருவெடுத்திருக்கிறது.

 

தற்போது வெளியாகியிருக்கும் ‘துளசி சினிமா நியூஸ்’ புத்தகத்தில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான தமிழ் சினிமாவின் புள்ளி விபரங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து வெளியாக இருக்கும் ‘துளசி சினிமா நியூஸ்’ புத்தகத்தில், தமிழ் சினிமா பற்றி பலர் அறியாத பல தகவல்கள் இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.