Jan 08, 2019 09:56 AM

25 வது நாள் வெற்றி விழாவை கொண்டாடிய ‘துப்பாக்கி முனை’!

25 வது நாள் வெற்றி விழாவை கொண்டாடிய ‘துப்பாக்கி முனை’!

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஹன்சிகா நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி முனை’ தற்போது வரை பல திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி வெளியான இப்படம் வெற்றிகரமாக 25 வது நாளை கடந்து இன்னும் பல திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், ‘துப்பாக்கி முனை’ படத்தின் வெற்றி விழாவை எளிமையான முறையில் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

 

Thuppakki Munai

 

இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, விக்ரம் பிரபு, இயக்குநர் தினேஷ் செல்வராஜ், ஒளிப்பதிவாளர் ராசா மதி, இசையமைப்பாளர் எல்.வி.முத்து கணேஷ், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீநிவாசன், டிசைனர் பவன், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த    மிர்ச்சி ஷா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.