Apr 29, 2020 09:38 AM

திரிஷா அறிவித்த ஒரு நாள் டேட்டிங் ஆபர்! - யாருடன் தெரியுமா?

திரிஷா அறிவித்த ஒரு நாள் டேட்டிங் ஆபர்! - யாருடன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் சுமார் 17 ஆண்டுகளாக முன்னணி ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, தற்போதும் இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்க தொடங்கியிருப்பவர், திருமணம் ஆனாலும், தான் தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருப்பேன், என் இறுதி மூச்சு வரை நடிப்பை கைவிட மாட்டேன், என்று கூறியிருக்கிறார்.

 

இதற்கிடையே, கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நடிக்க முடியவில்லையே, என்று சமீபத்தில் கவலைப்பட்ட திரிஷா, தற்போது டேட்டிங் போக ஆசைப்படுகிறாராம். அதுவும் தனது ரசிகருடனாம்.

 

ஆம், ஊரடங்கு முடிந்த பிறகு திரிஷாவுடன் டேட்டிங் போக அவரது ரசிகர்களுக்கு அரிய வாய்ப்பு ஒன்றை அவரே உருவாக்கியுள்ளார். அதற்காக ரசிகர்கள் செய்ய வேண்டியது, ”கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் திரிஷாவுடன் எப்படி செலவிவிடுவீர்கள்” என்பதை 500 வார்த்தைகளுக்கு குறையாமல் ஒரு கட்டுரை எழுத வேண்டுமாம். இதில் எந்த கட்டுரை திரிஷாவுக்கு பிடிக்கிறதோடு, அவருடன் கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு ஒரு நாள் டேட்டிங் செல்வாராம்.

 

இப்படி ஒரு ஆபரை ரசிகர்களுக்கு திரிஷா அறிவிக்க, தற்போது அவரது ரசிகர்கள் அனைவரும் கட்டுரை எழுதிவதில் தங்களது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளார்கள்.