Sep 16, 2018 02:52 AM

அம்மா அவதாரம் எடுத்த திரிஷா!

அம்மா அவதாரம் எடுத்த திரிஷா!

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கியிருப்பதோடு, வித்தியாசமான வேடங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

 

அந்த வகையில் ஹீரோயினுக்கு அம்மாவாக திரிஷா நடிக்கும் படம் ‘பரமபதம் விளையாட்டு’. இதில் திரிஷா மருத்துவராகவும், மருத்துவர் வேடத்தின் அம்மா வேடம் என்று இரண்டு வேடங்களில் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில், இறுதிக் கட்டப்படப்பிடிப்பு ஏற்காட்டில் நடைபெற்று வருகிறது.

 

இப்படம் குறித்து இயக்குநர் திருஞானம் கூறுகையில், “இதை போன்ற ஒரு கதையில் திரிஷா முதன் முதலாக நடிக்கிறார். இதை நான் மிகைப்படுத்தி கூறவில்லை, அதான் உண்மை. திரிஷா நடிப்பில் வெளிவந்த படங்களில் இது புதுமையானதாக அதே சமயம் முக்கியமானதாகவும் இருக்கும். 

 

Paramapatha Vilayattu

 

இந்த படத்தில் நடிப்பது தனக்கு சிறப்பாக இருக்கும் என்று திரிஷா நினைத்தார். இந்த கதாபாத்திரத்தை மிகவும் விரும்பினார். படப்பிடிப்பில் கடினமான காட்சியில் திரிஷா ஒரே டேக்கில் நடித்தார். படத்தில் நிறைய ட்விஸ்ட் மற்றும் திருப்பங்கள் இருக்கும், ரசிகர்களுக்கு அது மிகவும் பிடிக்கும்.” என்றார்.

 

24 Hrs நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது.