Sep 04, 2018 08:19 AM
உதயநிதியை ‘சைக்கோ’ வாக்கிய இயக்குநர்!

இயக்குநர் சீனு ராமசசமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்து முடித்திருக்கும் உதயநிதி, அடுத்ததாக கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
அதியமானின் படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கிறார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக அதிதி ராவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்திற்கு ‘சைக்கோ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கும் ‘சைக்கோ’ குழு, செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.