மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து!

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவை ஆட்டம் காண செய்த விஷயங்களில் மீடூவும் ஒன்று. பல முக்கிய பிரபலங்கள் சிக்கிய இந்த மீடூ விவகாரத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவும் சிக்கி சின்னாபின்னமானார்.
பாடகி சின்மயி வைரமுத்து மீது கூறிய மீடூ புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், வைரமுத்துவுக்கு ஆதரவாகவும், சின்மயிக்கு எதிராகவும் பலர் குரல் கொடுக்க தொடங்கினாலும், சின்மயி தொடர்ந்து வைரமுத்து மீது பல புகார்கள் கூறி வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மீடூ புகாரால் அசிங்கப்பட்ட வைரமுத்து, இந்த ஆண்டு மற்றொரு ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது, வைரமுத்துவுக்கு விருது வாங்கிக் கொடுத்த பாடலான “சர சர சார காத்து...” பாடலை உண்மையில் கார்த்திக் நேதா என்பவர் தான் எழுதினாராம். ஆனால், அப்பாடலுக்கு தன்னுடைய பெயரை போடும்படி தயாரிப்பாளரிடம் வைரமுத்து கூறினாராம். இந்த தகவலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவே சமீபத்திய பேட்டி ஒன்றிலும் கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக பலர் சமூக வலைதளங்களை கருத்துக்களை வெளியிட்டு வர, பாடகி சின்மயியும் இந்த பிரச்சினையை பெரிதாக்கும் முயற்சியாக தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.