Nov 30, 2018 05:43 AM

வரலட்சுமிக்கு கல்யாணம்! - சந்தோஷத்தில் சரத்குமார்

வரலட்சுமிக்கு கல்யாணம்! - சந்தோஷத்தில் சரத்குமார்

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் மகளான வரலட்சுமி, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. ஹீரோயின், வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வரும் வரலட்சுமியும், நடிகர் விஷாலும் காதலிப்பதாக கிசிகிசுக்கப்பட்ட நிலையில், இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதை நிஜமாக்கினார்கள்.

 

ஆனால், திடீரென்று இருவரும் பிரிவதாக ட்விட்டரில் தெரிவித்த நிலையில், தற்போது இருவரும் நண்பர்களாக பழகி வருகிறார்கள். விஷாலிடம் திருமணம் குறித்து கேட்டால், நடிகர் சங்கம் கட்டிடம் முடியட்டம், என்பதோடு வேறு எதையும் சொல்லாத நிலையில், வரலட்சுமியும் மவுனம் காத்து வந்தார்.

 

இந்த நிலையில், வரலட்சுமி கல்யாணத்தில் கோளத்தில் இருக்க, அதைப் பார்த்து அவரது தந்தை சரத்குமார் சந்தோஷப்படும் வீடியோ ஒன்றை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

என்னடா...இது! என்ற ஷாக்கோடு நாம் அந்த வீடியோவை பார்த்தால், அது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம். அட, நம்ம சிங்கம் இல்லாத சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரமா? என்று நமக்குள் கேள்வி எழுந்தாலும், தந்தை - மகள் விளம்பரம் என்பதால், யூத்தான சிங்கம் ஒதுங்கிடுச்சி போல, என்று பதிலும் நமக்குள்ளேயே தோன்றியது. விஷயம் இதுவல்ல, இந்த விளம்பரத்தில் நடித்துள்ள வரலட்சுமிக்கு திருமணம் போலவும், அதைப் பார்த்து சரத்குமார் சந்தோஷப்படுவது போலவும் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

 

கல்யாணப் பெண்ணாக வரலட்சுமி ரொம்ப அழகாக இருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 

இதோ அந்த வீடியோ,