Dec 31, 2018 03:23 AM

திருமணம் குறித்து பரவிய தகவல்! - விளக்கம் அளித்த வரலட்சுமி

திருமணம் குறித்து பரவிய தகவல்! - விளக்கம் அளித்த வரலட்சுமி

நடிகர் சரத்குமாரின் மகளும், பிரபல நடிகையுமான வரலட்சுமி சில படங்களில் ஹீரோயினாக நடிப்பதோடு வில்லியாகவும் நடித்து வருகிறார். 

 

இதற்கிடையே, வரலட்சுமியும் விஷாலும் காதலித்து வந்த நிலையில், இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டனர். ஆனால், திடீரென்று இருவரும் பிரிந்துவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்கள். இருப்பினும் தற்போது இருவரும் நண்பர்களாக பழகி வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என தகவல் பரவியது. ஆனால், இதை மறுத்திருக்கும் வரலட்சுமி, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக பதில் அளித்திருக்கிறார்.

 

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “செய்தி உருவாக்க வேண்டும் என்பதற்காக வருட கடைசியில் இப்படி வதந்தி பரப்புகிறார்கள். நான் திருமணம் செய்யவில்லை. சினிமாவில் தான் இருப்பேன். உங்களை எட்டி உதைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.