Nov 30, 2018 04:55 AM
தொடங்கியது விஜய் படம்! - சென்னையில் உருவாகும் பிரம்மாண்ட செட்

’மெர்ச’ மற்றும் ‘சர்கார்’ என்று தொடர்ந்து தனது படங்களின் மூலம் தீபாவளிக்கு இரண்டு வெற்றியை கொடுத்த விஜய் தனது 63 வது படத்தின் மூலமாக மீண்டும் தீபாவளியை குறி வைத்திருக்கிறார். மூன்றாவது முறையாக இயக்குநர் அட்லி - விஜய் கைகோர்த்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், விஜய் 63 படத்திற்காக சென்னை பின்னி மில்லில் பிரம்மாண்டமான செட் உருவாக்கப்படுகிறது. இதற்கான பணி இன்று பூஜையுடன் தொடங்கியது.
முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் படங்களுக்கு செட் அமைத்து வரும் கலை இயக்குநர் முத்துராஜ், அட்லி இயக்கத்தில் உருவான ’ராஜா ராணி’, ’தெறி’, ’மெர்சல்’ ஆகிய மூன்று படங்களுக்கும் கலை இயக்குநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.